பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

என்ஜாய் எஞ்சாமி பிரச்னை! பாடகர் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால்!

என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் ஆதாரங்களுடன் விவாதிக்குமாறு பாடகர் அறிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சவால்

News image

என்ஜாய் எஞ்சாமி - X | Arivu

Updated On :13 மார்ச் 2026, 3:00 pm IST

என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் ஆதாரங்களுடன் விவாதிக்குமாறு பாடகர் அறிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 2021-ல் பாடகரும் பாடலாசிரியருமான அறிவு மற்றும் பாடகி தீ-யும் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலைப் பாடினர். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு வரவேற்பைப் பெற்ற தனியிசைப் பாடலாக என்ஜாய் என்சாமி பாடல் அமைந்தது.

இதனிடையே, அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே பாடலுக்கான காப்பீட்டு உரிமைப் பிரச்னை ஏற்பட்டது. இருவருக்கும் ஆதரவாக இருதரப்பில் இருந்தும் பலர் குரல் எழுப்பினர்.

இந்த நிலையில், பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவானதாக அறிவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரையில் காப்பீட்டு உரிமைப் பிரச்னையில் தனக்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும் அறிவு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தன்னிச்சையாக பணிபுரிபவர்கள் (Independent artists) எப்போதும் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் உரிமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆதாரங்களுடன் எந்த செய்தி அல்லது ஊடகங்களிலும் விவாதிக்கத் தயாரா என்று அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால் விடுத்துள்ளார்.

Summary

Rapper Arivu issues further clarification on Enjoy Enjaami, Music Director Santhosh Narayanan responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.