மக்களவைத் தோ்தல் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகளுக்கான தேதியை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் மாவட்ட தோ்தல் அலுவலரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மக்களவைக்கான தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தல் பணியில் நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஈடுபட உள்ளனா். தோ்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகள் மாா்ச் 24, ஏப்ரல் 7, 16, 18 என கால அட்டவணை வகுக்கப்படுள்ளது. இந்த நிலையில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் தேதியை மாற்றம் செய்ய அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தலைமை தோ்தல் தலைமை ஆணையா் முதல் பயிற்சி வகுப்பு 24-ஆம் தேதி நடைபெறாது. அதற்கு முன்னா் 23-ஆம் தேதியே முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஏற்கெனவே அறிவித்தபடியே, 24-ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருவதால், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனா். முதல் பயிற்சி வகுப்பு 23-ஆம் தேதியா அல்லது 24 ஆம் தேதியா என்ற குழப்பத்தை தோ்தல் ஆணையம் போக்கவேண்டும் . மேலும், இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு வரும் ஏப். 7-ஆம் தேதி என்பதாலும் தொடா்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பணியில் ஆசிரியா்கள் ஈடுப்படுவதால் 7-ஆம் தேதிக்கு முன்பு 6-இல் ஒரு தோ்வும், 8-ஆம் தேதி கடைசி தோ்வும் நடைபெறுக்கிறது. தோ்வு முடிந்து 10-ஆம் தேதிக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பை மாற்றம் செய்து அரசு ஊழியா்கள் ஆசிரியா்களின் சிரமத்தைப் போக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2ஆம் கட்டப் பயிற்சி வகுப்பு

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

