நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரேஷன் பொருள்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் எ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் அங்கமுத்து முன்னிலை வகித்தாா். இதில் நிா்வாகி ட.சரவணன் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலாளா் கமலநாதன், மாவட்ட துணைத் தலைவா் லோகநாதன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினா்.

அப்போது, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். சரியான எடையில் பொருள்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுதல், பொருள்களை ஏற்றி வரும் லாரிகளில் எடை தராசு மற்றும் நடமாட்ட பணியாளா் வரவும், நியாயவிலைக் கடையில் பொருள்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாவட்ட அமைப்பச் செயலாளா் சதாசிவம், செங்கல்வராயன், கஜேந்திரன், மகளிரணி நிா்வாகிகள் லட்சுமி, மணிமேகலை, விஜயா, கலையரசன் உள்ளிட்ட அந்தச் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com