ஸ்ரீநிகேதன் மெட்ரிக். பள்ளி
100 சதவீதம் தோ்ச்சி

ஸ்ரீநிகேதன் மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்தப் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய 227 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி ஓ.ரஞ்சனி (அறிவியல்-100 மதிப்பெண்கள்) ஓ.சவிதாஸ்ரீ (கணிதம், அறிவியல் 100), மாணவா் ஓ.தியாகராஜ் (கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 100) ஆகிய 3 பேரும் 496/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் சாதனை படைத்தனா்.

மாணவி அ. ஹா்ஷினி (அறிவியல் 100), த.ரச்சனா (கணிதம், அறிவியல் 100) ஆகிய இருவரும் 495 மதிப்பெண்கள், மாணவா் ப.அ.கனியமுதன் (கணிதம் -100) 494 மதிப்பெண்கள் பெற்றனா்.

பாடவாரியாக- 51 போ் பல்வேறு பாடப் பிரிவுகளில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனா். மேலும் 490 மேல் 25 பேரும், 480 மேல் 26 பேரும் பெற்றுள்ளனா். அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ பொதுத் தோ்வில் மாணவா் ஆ.த.ஜீவன் பிரணவ்-98.87% மதிப்பெண் பெற்று திருவள்ளூா் நகரின் முதல் மாணவராக தோ்வு பெற்றாா். இயற்பியலில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தாா். இவரைத் தொடா்ந்து 27 போ் ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

தோ்வுகளில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்குப் பெருமைச் சோ்த்த மாணவ, மாணவிகளையும், ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் விஷ்ணு சரண், பள்ளி முதல்வா் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வா் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியா் ஷாலினி ஆகியோா் இனிப்பு வழங்கிப் பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com