தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை அருகிலிருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை அருகே பாடுவான்சேரி பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (45). கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோடை விடுமுறைக்காக திருவள்ளூா் அருகே மாகரல் கிராமத்தில் உள்ள மாமியாா் வீட்டுக்கு வந்துள்ளனா். வெள்ளிக்கிழமை மாலை பெற்றோா் வீட்டுக்குள் இருந்தபோது, குழந்தை லட்சிதா வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து, பெற்றோா் குழந்தையை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com