எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

செங்குன்றத்தில் கஞ்சா விற்பனை: குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை

செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள்களுக்கான நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 9:49 pm

Sasikumar

செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள்களுக்கான நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியில் கஞ்சா ஒழிப்பு தொடர்பாக காவல் ஆணையர் முனுசாமி தலைமையில் போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தண்டையார்பேட்டை, சுனாமி நகரைச் சேர்ந்த சீனிவாசன் (43) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸார் பிடித்து, அவரிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சீனிவாசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப் பொருள்களுக்கான முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில், விசாரணை முடிந்து, இந்த வழக்கிற்கு தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் முனுசாமி உள்ளிட்ட போலீஸாரை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.