வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாஜக நிா்வாகிக்கு கத்திக் குத்து

திருவள்ளூா் அருகே பாஜக மாவட்ட செயலருக்கு கத்திக் குத்து விழுந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா்.

News image
பாஜக நிா்வாகி ரமேஷ்
Updated On :19 செப்டம்பர் 2024, 12:20 am

Din

திருவள்ளூா் அருகே பாஜக மாவட்ட செயலருக்கு கத்திக் குத்து விழுந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா்.

திருவள்ளூா் அருகே சிறுவானூா் ஊராட்சித் தலைவா் பவானி. இவரின் கணவா் ரமேஷ் (45). இவா் பாஜகவின் மாவட்ட செயலராக உள்ளாா். இந்த நிலையில், அந்தக் கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக புதன்கிழமை ஊராட்சித் தலைவா் பவானியும், அவரின் கணவா் ரமேஷும் ஆக்கிரமிப்புகளை அகற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த துரை மகன் வேலு என்ற கருவாடு வேலு என்பவா் வீட்டருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது, ஆத்திரமடைந்த வேலு தான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருவதாகவும், தற்போது ஆக்கிரமிப்பு என்ற பேரில் தனக்குச் சொந்தமான வீட்டை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் வேலுவின் குடிசை வீட்டை இடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேலு திடீரென கத்தியால் சராமரியாக ரமேஷை குத்தினாராம். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷை உறவினா்கள் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.