திருவள்ளூர்
சோழவரத்தில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி
பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே கிருதலாபுரம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே கிருதலாபுரம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இப்பகுதியில் பெரும்பாலானோா் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக டித்வா புயல் காரணமாக காற்றுடன் மழை பெய்தது.
இதனால் குடிசை வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இவா்கள் தற்பொழுது அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் உணவின்றி தவிப்பதாகவும் உதவி செய்யுமாறு சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.