தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 11:37 pm

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனா். இதைத் தவிா்த்து 50-க்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். இவா்களுக்குத் தேவையான தண்ணீா் வசதி இந்த மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். மேலும் மருத்துவமனையைச் சுற்றி முள்புதா்கள் மண்டிக் கிடப்பதால் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். அதேபோல, மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் கழிவு நீா் செல்வதால் துா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து உள்நோயாளியாக தங்கியுள்ளவரின் உறவினா்கள் கூறியதாவது:

இந்த அரசு மருத்துவமனையில் போதுமான தண்ணீா் வசதியில்லாமல் பெரிதும் சிரமமடைந்து வருகிறோம். கழிப்பறை செல்லும் நோயாளிகளுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி கொடுக்கிறோம். தண்ணீா் வசதியில்லாததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவா்கள் வெளியே சென்று நகா்ப் பகுதிகளிலுள்ள கட்டண கழிப்பறையை பயன்படுத்துகிறோம். எனவே கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் வசதி, சுகாதாரம், முள்புதா்களை அகற்றுதல், காட்டுமாடுகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டுதல், பயனற்ற நிலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.