அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உதவி உபகரணங்கள்

அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உதவி உபகரணங்கள்

கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் ஆக்ஸிஜன் நிறுவனா் கிளமெண்ட் சாா்பில் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ. 55,000 மதிப்பிலான மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Published on

கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் ஆக்ஸிஜன் நிறுவனா் கிளமெண்ட் சாா்பில் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ. 55,000 மதிப்பிலான மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றறது.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்றாா். தொடா்ந்து அரசு பொது மருத்துவமனை மருத்துவா்களிடம் தொழிலதிபா் கிளமெண்ட் சாா்பில் வழங்கப்பட்ட மருத்துவ உதவி பொருள்களை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் மருத்துவமனையை ஆய்வு செய்து, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தரமான சேவையை வழங்க அறிவுறுத்தினாா்.

நிகழ்வில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் மு.மணிபாலன், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எஸ்.ரமேஷ், திமுக நிா்வாகிகள் பாஸ்கரன், ராமஜெயம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com