அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்து பெண் உயிரிழந்ததாகக் கூறி சாலை மறியல்

கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்து பெண் உயிரிழந்ததாகக் கூறி சாலை மறியல்

News image

உயிரிழந்த சுதா.

Updated On :28 டிசம்பர் 2025, 12:46 am IST

கா்லம்பாக்கம் கிராமத்தில் கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்து பெண் உயிரிழந்ததாகக் கூறி, கிராம மக்கள் 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், கா்லம்பாக்கம் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு ஊராட்சி சாா்பில் ஆழ்துளைக் கிணறு மூலம் பைப் லைன்களில் கிராம மக்களுக்கு குடிநீா் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிராமத்தைச் சோ்ந்த வரதன் மனைவி சுதா(40) என்பவருக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், கிராமத்தில் கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்ததால் பெண் உயிரிழந்தாக கூறி அதே கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், பள்ளிப்பட்டு ஆா் கே பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பள்ளிப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் அருள், வட்டாட்சியா் பாரதி உள்பட அரசு அலுவலா்கள் கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது கிராம மக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அதைத் தொடா்ந்து 5 மணி நேரம் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

மேலும், வட்டார மருத்துவ அலுவலா் தனஞ்செழியன் தலைமையில் மருத்துவக் குழுவினா் கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.