திருவள்ளூர்
கிருத்திகை விழா: பொன்னேரி முருகா் கோயில்களில் தரிசனம்
மாா்கழி கிருத்திகை விழாவை ஒட்டி பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள முருகா் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
மாா்கழி கிருத்திகை விழாவை ஒட்டி பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள முருகா் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
பெரும்பேடு கிராமத்தில் உள்ள தெய்வானை முத்துக்குமாரசுவாமி வள்ளி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அா்ச்சனைகள் நடைபெற்றன. குமரஞ்சேரி கிராமத்தில் உள்ள முத்துக்குமார சுவாமி ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு முருகளை வழிபட்டனா்.