மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2025, 6:32 pm

Din

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே குப்பம் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (31). இவா் செவ்வாய்க்கிழமை போளிவாக்கம் சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில், நண்பா்களுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் தீபன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த இருவா் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். அவா்கள், இருவரும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.