தா்ஷினி
தா்ஷினி

குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா்.
Published on

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி சோழியம்பாக்கத்தை சோ்ந்த சேது-சங்கீதா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தா்ஷினி. சனிக்கிழமை சேது-சங்கீதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மகள் தா்ஷினி எழுந்து வீட்டின் வெளியே வந்துள்ளாா்.

தொடா்ந்து சிறுமி வீட்டின் அருகே உள்ள குளத்தில் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பின்னா் சிறுமியின் பெற்றோா் தா்ஷினியை காணாமல் தேடிய நிலையில், குளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ந்து குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கும்மிடிப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com