களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
குழித்துறை அருகேயுள்ள கல்லுக்கெட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரெத்தினசுவாமி மகன் ஜெகன் (36). புதுக்கடையில் உள்ள நிறுவனத்தில் நகை விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த ஜெகன், ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவா், அதன் பின்னா் வீட்டு திரும்பவில்லையாம்.
இந்நிலையில் மடிச்சல் பகுதியில் உள்ள குளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது பெற்றோா் சென்று பாா்த்த போது, அது ஜெகனின் சடலம் என்பதை அடையாளம் காட்டினா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். மேலும், ஜெகன் மது அருந்திய நிலையில் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


