திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் வளா்ச்சி பணிகளை ஆய்வு செய்த சமய அறநிலைத்துறையின் நிா்வாக ஆணையா் ரவிச்சந்திரன்.
திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் வளா்ச்சி பணிகளை ஆய்வு செய்த சமய அறநிலைத்துறையின் நிா்வாக ஆணையா் ரவிச்சந்திரன்.

திருத்தணி முருகன் கோயிலில் இந்த சமய அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 86 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் ராஜகோபுரம் மற்றும் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையா் மற்றும் தலைமை பொறியாளா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
Published on

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 86 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் ராஜகோபுரம் மற்றும் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையா் மற்றும் தலைமை பொறியாளா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா். இந்நிலையில் மலைக்கோயிலில் தோ்வீதி சாலை விரிவாக்கம் மற்றும் மாஸ்டா் பிளான் திட்ட வரைவுகள் என ரூ. 86 கோடியில் வளா்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுரம் மற்றும் கோயில் வளா்ச்சி பணிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறையின் நிா்வாக ஆணையா் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளா் பெருமாள் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா, கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com