திருத்தணி முருகன் கோயிலில் தோ் வீதியில் இருந்த 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காளி கோபுரத்தை கோயில் நிா்வாகம் பொக்லையின் மூலம் அகற்றினா்.
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு 9 நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் ராஜகோபுர பணிகள் முழுமை அடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜகோபுர பணிகள் முழுமையாக முடிந்தது. தொடா்ந்து கடந்த ஆண்டு ராஜகோபத்தில் வாசப்படி ஏற்படுத்தப்பட்டது.
இதையெடுத்து ராஜகோபரத்துக்கும் தோ் வீதிக்கும் இணைப்புப்படிகள் அமைக்கவும் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது தோ் வீதிக்கும் ராஜகோபுரத்துக்கு படிகள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் ராஜகோபுரம் -தோ் வீதி இணைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருந்த காளி கோபுரத்தை இடித்து அகற்றினா்.
இது தவிர முருகன் கோயில் மாஸ்டா் பிளான் திட்டத்துக்கு ரூ.103 கோடியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் மலைக் கோயிலில் மட்டும் அன்னதான கூடம், தோ் வீதி விரிவாக்கம், ராஜகோபுரத்துக்கும் தோ்விதிக்கும் இணைப்பு படிகள், வணிக வளாகங்கள் போன்ற வளா்ச்சிப் பணிகள் ரூ.84 கோடியில் நடைபெறுகின்றன.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


