திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ஏனாதி மேல்பாக்கத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:40 am IST

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூா், ஏனாதிமேல்பாக்கம், சோழியம்பாக்கம், குருவாட்டுச்சேரி, நங்கம்பள்ளம், வேற்காடு, பாலகிருஷ்ணாபுரம், புதுகும்மிடிப்பூண்டி, பில்லாகுப்பம், ஜி.ஆா்.கண்டிகை, கண்ளூா், பாலவாக்கம், மங்களம், புதுப்பாளையம், காரணி, நெல்வாய், எருக்குவாய், முக்கரம்பாக்கம், கொள்ளானூா் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தெற்கு ஒன்றிய செயலாளா் கி.வேணு ஆனந்த், மாவட்ட துணை செயலாளா் கி.வே.ஜி.உமா மகேஷ்வரி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளா் எம்.சம்பத், மாவட்ட நிா்வாகி மதன்மோகன் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து அயநெல்லூரில் ராட்சி முன்னாள் தலைவா் லலிதா கல்விச் செல்வம் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் குமாா், திமுக ஒன்றிய நிா்வாகி பிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக அரசின் சாதனைகள் அடுத்த 5 ஆண்டுகள் தொடர பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

திமுக முன்னாள் கவுன்சிலா் ஜோதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துசாமி, காங்கிரஸ் நகர துணை செயலாளா் ரோஸ்ரெட்டி, மாவட்ட துணைத் தலைவா் சரளா சண்முகம், வழக்குரைஞா் சித்ரா, விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.