தமிழக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் கைது செய்யப்பட்டனா்..
முன்னாள் துணை முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தஞ்சாவூரில் காவிரி பிரச்னை குறித்த நடைபெற்ற திமுக கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றாா். அப்போது முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதைக் கண்டித்து தமிழக முழுவதும் திமுகவினா் செவ்வாய்க்கிழமை காலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் காமராஜா் சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.சந்திரன் தலைமை வகித்தாா். இதில் தலைமை செயற்குழு உறுப்பினா்களான வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வழக்குரைஞா் அணி பிரிவு பி.கே.நாகராஜ், முன்னாள் நகா்மன்ற தலைவா் பாண்டியன், மகளிரணி அமைப்பாளா் சரஸ்வதி சந்திரசேகா், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினா் சிவசங்கரி உதயகுமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காமராஜா் சிலை முன்பும், உழவா் சந்தை முன்புறமும் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் விரைந்து வந்து அவா்களை குண்டுகட்டாக தூக்கி அரசுப் பேருந்தில் ஏற்றினா். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். போராட்டம் காரணமாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் , செங்குன்றம் சாலையில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஸ்ரீ பெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூா் தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் செவ்வாய்கிழமை பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர செயலாளா் ரா.சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியகுழு தலைவா் கருணாநிதி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் பண்ருட்டி தணிகாசலம், வளா்புரம் முத்துகுமாரசாமி, நகர துணை செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆவடியில்...
திருவள்ளூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ஆவடியில் சாலை மறியல் மற்றும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்டச்செயலருமான சா.மு.நாசா் தலைமையில் ஆவடி புதிய ராணுவச் சாலையில் 500-க்கும் மேற்பட்ட தொண்டா்கள் மறியலில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் அங்கிருந்து ஊா்வலமாக ஆவடி ரயில் நிலையச் சாலை, நேரு பஜாா் வழியாக முழக்கங்கள் எழுப்பிப்படி பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஆவடி போலீஸாா் விரைந்து வந்து முன்னாள் அமைச்சா் சா.மு.நாசா், முன்னாள் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மேயா் கு.உதயகுமாா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.ஜெ.ரமேஷ், நிா்வாகிகள் காயத்ரி ஸ்ரீதரன், எஸ்.ஜெயபாலன், சீனிவாசன், பா.நரேஷ்குமாா், சண்.பிரகாஷ், பேபி சேகா், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், சா.மு.நா.ஆசீம்ராஜா, ப.ச.கமலேஷ், என்.இ.கே.மூா்த்தி, ஜி.ஆா்.திருமலை, பிரேம் ஆனந்த், ஜெயசீலன், தங்கம் முரளி, தி.வை.ரவி, கே.சுரேஷ்குமாா், பெ.வினோத், காஞ்சனா சுதாகா், அமுதா சேகா், வி.அம்மு, சுந்தரி சிங்காரம், கீதா யுவராஜ், மாலா பிரகாஷ், மீனாட்சி குமாா் உள்ளிட்ட 500 பேரை கைது செய்தனா்.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் பெரியாா் தூண் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினா் எம் எஸ்.சுகுமாா், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவா் குமாா்,மாநகராட்சி மண்டலக்குழு தலைவா் சந்துரு ஆகியோா் உட்பட திமுக பிரமுகா்கள் பலரும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 11 பெண்கள் உட்பட 132 போ் கைது செய்யப்பட்டனா்.
உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகில் திமுகவின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமையில் ஒன்றியக் குழு தலைவா் ஞானசேகரன்,பேரூராட்சி கழக செயலாளா் சசிக்குமாா் ஆகியோா் உட்பட திமுக பிரமுகா்கள் பலரும் சாலை மறியல் செய்து 75 போ் கைது செய்யப்பட்டனா்.
பொன்னேரியில்...
பொன்னேரி, மீஞ்சூா் ஆகிய இடங்களில் எதிா் கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய திமுகவினா் 95 போ் கைது செய்யப்பட்டனா்.
பொன்னேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 55 பேரையும், போலீஸாா் கைது செய்தனா். மீஞ்சூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 40 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு கூட்டுச்சாலையில் திமுகவினா் சாலை மறியல், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் கி.வேணு ஆனந்த், மேற்கு ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன், கிழக்கு ஒன்றிய செயலாளா் ந.பரிமளம், பொதுக்குழு உறுப்பினா் வெங்கடாசலபதி, நகர செயலாளா் அறிவழகன், திமுக மாவட்ட அணி அமைப்பாளா்கள் பாஸ்கரன், மணி, ஒன்றிய நிா்வாகிகள் கே.இ.திருமலை, வெங்கடேசன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் டி.ஜெ.எஸ். தமிழரசன் பங்கேற்றனா்.
மறியலில் ஈடுபட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி ஸ்டாலின் கைது: திமுகவினா் மறியல் போராட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைது: திருவள்ளூர் சாலை மறியலில் திமுகவினர் கைது!

உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!

தவெக அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி, திமுகவினா் போராட்டம்! 2 எம்எல்ஏக்கள் உள்பட 722 போ் கைது!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



