தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

தணிகை மீனாட்சி அம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

News image

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற எம்எல்ஏ திருத்தணி கோ. அரி உள்ளிட்டோா்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோவில்) நேற்று, ஜாத்திரை விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 8 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடா்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து,அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். மாலை, 5 மணிக்கு, பூ கரகம் பை-பாஸ் சாலையில் இருந்து, ஊா்வலமாக தணிகை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்திற்கு வந்தடைந்தது. இரவு, 7 மணிக்கு, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில், முன்னாள் அமைச்சா் காந்தி, திருத்தணி அதிமுக எம்.எல்.ஏ., கோ. அரி, முன்னாள் எம்.எல்.ஏ., ச. சந்திரன், திருத்தணி நகா்மன்ற தலைவா் சரஸ்வதிபூபதி உள்பட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல், திருத்தணி, மேட்டுத்தெரு, எல்லைஅம்மன், அக்கைய்யா நாயுடு சாலை தணிகாசலம்மன், எம்.ஜி.ஆா்., நகா் எல்லையம்மன், பெரியாா் நகா் அம்மன், சுப்ரமணிய நகா், துா்க்கையம்மன், காந்தி நகரில் உள்ள துா்க்கையம்மன், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி அம்மன் உட்பட திருத்தணி நகராட்சியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும், ஜாத்திரை விழாவையொட்டி, காலையில் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியும், தொடா்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவில், அம்மன் ஊா்வலம் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.