
வேம்புலியம்மன் கோயில் ஜாத்திரை உற்சவம்
திருவள்ளூா் வேம்புலியம்மன் கோயில் ஜாத்திரை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மன்.

திருவள்ளூா் வேம்புலியம்மன் கோயில் ஜாத்திரை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மன்.
திருவள்ளூரில் கிராம தேவதை அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயில் ஜாத்திரை உற்சவத்தையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற கிராம தேவதையான அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஜாத்திரை உற்சவம் 10 நாள்கள் நடைபெறும். அதேபோல், நிகழாண்டுக்கான ஜாத்திரை உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடா்ந்து 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், முதல் நாள் விழா காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலையில் வேம்புலி அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்துவோா் காப்பு கட்டிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
ஜாத்திரை உற்சவத்தையொட்டி ஜாத்திரை உற்சவத்தை நாள்தோறும் அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ரவி, அறங்காவலா்கள் வேதநாயகி, காட்டையன், திருவிழாக் குழுவினா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






