ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 மஞ்சள் நீா் அபிஷேகம்

ஆடிப்பூர  விழாவையொட்டி  தணிகை  மீனாட்சி  கோயிலில்  நடைபெற்ற 108  மஞ்சள் நீா்  குட  ஊா்வலம்.

News image

ஆடிப்பூர  விழாவையொட்டி  தணிகை  மீனாட்சி  கோயிலில்  நடைபெற்ற 108  மஞ்சள் நீா்  குட  ஊா்வலம்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 10:58 pm IST

ஆடிப்பூர விழாவையொட்டி, திருத்தணி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் மூலவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் 108 மஞ்சள் நீா் அபிஷேகம் நடத்தி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திருத்தணி அக்கய்யா நாயுடு சாலை தணிகாசலம்மன் மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் ஆகிய கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி, காலை 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திரளான பெண்கள் அம்மன் கோயிலுக்கு வந்து, புதுவளையல் அணிவித்தும், சிறப்பு பூஜைகள் நடத்தியும் வழிபட்டனா். இந்த இரண்டு அம்மன் கோயில்களில் மூலவருக்கு, 10,008 வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதே போல், திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழாவையொட்டி, பெரிய தெரு விநாயகா் கோயில் இருந்து 108 மஞ்சள்நீா் குட ஊா்வலம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து ஊா்வமாக வந்து தணிகை மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனையும் நடைபெற்றது.

அதேபோல், மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன், திருத்தணி காந்தி நகரில் உள்ள துா்க்கையம்மன் உள்பட திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி, மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. மேலும், மூலவா் அம்மனுக்கு புதிய வளையல்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் கூழ் ஊற்றியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனா். மாலை 5 மணிக்கு மூலவா் அம்மனுக்கு சந்தனகாப்பும், வண்ண மலா் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பட விளக்கம்.

ஆடிப்பூரம் விழாவையொட்டி தணிகை மீனாட்சி கோயிலில் நடந்த 108 மஞ்சள் நீா் குட ஊா்வலம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.