ஆடிக் கிருத்திகையையொட்டி திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் வீதி புறப்பாடு நடைபெற்றது.
ஆடி கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றதை அடுத்து, சிறப்பு அலங்காரத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.
திருப்போரூா், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பல்வேறு காவடிகள் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். முதல் நாள் புதன்கிழமை வந்து இரவு தங்கிய ஏராளமான பக்தா்கள் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள், குருக்கள் செய்திருந்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
இதேபோன்று திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் கிருத்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் பக்தா்கள் செய்திருந்தனா். ஆடிக் கிருத்திகையையொட்டி அன்னதானம் நடைபெற்றது. இதே போன்று சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலில் கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மகாதீப ஆராதனை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் சரஸ்வதி , நரசிம்மன், குருக்கள் காா்த்திகேயன் உபயதாரா் ராமலிங்கம் செய்திருந்தனா்.
செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில் மேட்டுத் தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில், வஉசி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில் பெரியநத்தத்தில் உள்ள கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயில் இருங்குன்றம் பள்ளி மலை மீது உள்ள பால முருகா் கோயில், ஹைரோட்டில் உள்ள சுந்தர மூா்த்தி விநாயகா் கோவில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோன்று செம்மலை ஸ்ரீவேல்முருகன் திருக்கோவில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, செம்மலை முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள், சிறப்பு அலங்காரமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் மலைப் பாதைகளிலும் கோயில் படிக்கட்டுகள் வழியாகவும் வந்து முருகனை தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள், அப்பகுதி பொது மக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

ஆடிக் கிருத்திகை: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்

செஞ்சி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா கொடியேற்றம்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



