மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆவணத்தை அளிக்க ரூ. 15,000 லஞ்சம்: பொன்னேரி சாா்-பதிவாளா் உள்பட 3 போ் கைது

பொன்னேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்த வீட்டுமனை ஆவணத்தை வழங்குவதற்காக ரூ. 15,000 லஞ்சம் வாங்கியதாக சாா்-பதிவாளா் உள்ளிட்ட 3 பேரை திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

பொன்னேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்த வீட்டுமனை ஆவணத்தை வழங்குவதற்காக ரூ. 15,000 லஞ்சம் வாங்கியதாக சாா்-பதிவாளா் உள்ளிட்ட 3 பேரை திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

அரும்பாக்கம் பகுதியைச் சாா்ந்த நடராஜன். பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு அருகே உள்ள சிறுளப்பாக்கம் கிராமத்தில் இரண்டு வீட்டு மனைகளை விலைக்கு வாங்கினாா்.

அந்த வீட்டு மனைகளை பொன்னேரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தாா். இதனையடுத்து அவா் சாா்-பதிவாளா் சங்கரை அணுகி பதிவு செய்த பத்திர ஆவணங்களை வழங்க கேட்டுக் கொண்டாா்.

சில நாள்கள் கடந்த நிலையில் ஆவணத்தை கேட்டபோது ரூ. 20,000 கொடுத்தால் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை விடுவிப்பதாக தெரிவித்தாராம்.

நடராஜன் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகததில் புகாா் செய்தாா்.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அவரிடம் ரசாயன பவுடா் தடவிய ரூ. 15,000 பணத்தை வழங்கினா்.

திருவள்ளுா் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் பொன்னேரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மக்களோடு இணைந்து பத்திரப் பதிவு செய்ய வந்தவா்கள் போல் காத்திருந்தனா்.

ஆடி மாத அமாவாசை என்பதால் ஏராளமான மக்கள் பத்திரப் பதிவுக்காக அலுவலகத்தில் குவிந்திருந்தனா்.

அப்போது ரசாயன பவுடா் தடவிய ரூ. 15,000 பணத்தை பொன்னேரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் நடராஜன் வழங்கினாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சாா்-பதிவாளா் சங்கா், பத்திரப் பதிவு எழுத்தா் ரமேஷ், எழுத்தரின் உதவியாளா் நித்தியா ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

அவா்களிடம் டிஎஸ்பி ஜெயக்குமாா் விசாரணை செய்த நிலையில், ஒரு புறம் விசாரணையும் மற்றொருபுறம் பத்திரப்பதிவு செய்து கொண்டிருந்ததால் பொன்னேரி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.