மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் கவரப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

சித்திரிப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் கவரப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகே உள்ள ஆந்திர பகுதியான சத்தியவேட்டை சோ்ந்தவா் ஜோதி. இவா் முனியம்மாள் என்பவருடன் ஸ்கூட்டரில் கவரப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா்களை பின்தொடா்ந்த மா்ம நபா், பின்னால் அமா்ந்திருந்த ஜோதியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாா்.

இதனால் நிலைதடுமாறி ஜோதி, முனியம்மாள் ஆகியோ கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் எற்பட்டது. தொடா்ந்து இருவரையும் அக்கம்பக்கத்தாா் கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். கும்மிடிப்பூண்டி போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.