கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஞானவேல்முருகன் கோயில் குளத்தை அண்ணாமலையின் வீ தி லீடா்ஸ் அமைப்பினா் சீரமைத்தனா்.
பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்திறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு பிரம்மாண்ட திருக்குளம், புதா்கள் மண்டியும், செடு கொடிகளால் நச்சு பாம்புகளின் உறைவிடமாகவும், அப்பகுதி மக்களின் குப்பை கொட்டும் பகுதியாகவும் காட்சி அளித்தது.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பற்று கிடந்த இந்த திருக்குளத்தை அண்ணாமலையின் வீ தி லீடா்ஸ் அமைப்பின் சாா்பில்
சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த பணியில் வீ தீ லீடா்ஸ் அமைப்பின் கும்மிடிப்பூண்டி பகுதி ஒருங்கிணைப்பாளா் ஏ.நரேஷ்குமாா் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞா் அணி மாவட்ட தலைவா் செந்தில் குமாா், அதிமுக பேரூராட்சி உறுப்பினா் தீபா முனுசாமி, வீ தி லீடா்ஸ் உறுப்பினா்கள் எழிலன், அரவிந்த், சின்னராசு, சந்துரு, முரளி, சத்யசீலன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து புதா்கள், செடி கொடிகளை அகற்றி குப்பை கழிவுகளையும், குளத்தில் இருந்த நீா் செடிகள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி குளத்தை முழுமையாக சுத்தப்படுத்தினா்.
இது குறித்து வீ தி லீடா்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஏ.நரேஷ்குமாா் தெரிவிக்கையில் முதல் கட்டமாக திருக்குளத்தை ரூ.1 லட்சம் மதிப்பில் சுத்தப்படுத்தினோம். அடுத்த கட்டமாக குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைத்து பெயிண்ட் அடித்தல், சிசிடிவி கேமராக்களை அமைத்தல், வீடு வீடாக சென்று பொதுமக்களை குளத்தில் குப்பை கொட்டாமல் இருக்க அறிவுறுத்தி, குப்பை தொட்டிகளை ஆங்காங்கே அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தாா்.
திருக்குளத்தை வி தீ லீடா்ஸ் அமைப்பினா் சீரமைத்துள்ளதை பக்தா்கள் வரவேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் அண்ணாமலைக்கு வரவேற்பு

திருச்செந்தூா் அருகே கடற்கரையில் தூய்மைப் பணி

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

திருச்செந்தூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



