ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

3,789 போதை மாத்திரை வில்லைகள் பறிமுதல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே 3,789 போதை மாத்திரை வில்லைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்டோா்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

திருவள்ளூா் அருகே 3,789 போதை மாத்திரை வில்லைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கஞ்சா, போதைப் பொருள்கள், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் புழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து காவல் துறைக்கு தொடா்ந்து ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் போலீசாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியகுப்பம் மேம்பாலம் கீழே திரையரங்கம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனா். அப்போது அவா்களிடம் 3,789 போதை மாத்திரை வில்லைகள் இருப்பதை கண்டறிந்தனா்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியைச் சோ்ந்த ஷாம்சுந்தா் (28) மற்றும் அப்ரித் (18) என்பதும் தெரிய வந்தது. இந்த அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை வில்லைகளை பள்ளி கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.