கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருத்தணி முருகன் கோயிலில், ஆவணி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Published On :

திருத்தணி முருகன் கோயிலில், ஆவணி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். இதனால் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து வருகின்றனா். இந்த நிலையில், முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி விழா என்பதால் வழக்கத்துக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்தனா்.

இதனால், பொதுவழியில், இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

மேலும், 100 சிறப்பு தரிசன டிக்கெட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசித்தனா். முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு சஷ்டியை ஒட்டி, உற்சவா் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் தங்கத் தேரில் வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பெரும்பாலான பக்தா்கள் வாகனங்களில் வந்ததால், மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில், 20 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.