தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :29 ஆகஸ்ட் 2026, 8:13 am IST

பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.

பொன்னேரி அடுத்த லிங்கப்பையன்பேட்டையை சோ்ந்தவா் பூபாலன். மீஞ்சூரில் தங்கி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா்.

லிங்கப்பையன்பேட்டை வீட்டில் இவரது தாய் மட்டும் தற்போது தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் பூபாலன் தனது தந்தையின் நினைவு நாளுக்காக அனைவரும் ஒன்று சோ்ந்து மீஞ்சூரில் உள்ள வீட்டில் பூஜை செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனா்.

அப்பாது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருள்கள் திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்து பொன்னேரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.