அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு தங்க, வெள்ளி நகை, ரொக்கம் திருட்டு
திருவள்ளூா் அருகே அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


திருவள்ளூா் அருகே அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் புத்தாராம் (46). இவா் எறையூா் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றாராம். அதைத் தொடா்ந்து, காலை 8 மணிக்கு அருகில் மளிகை கடை நடத்தி வரும் சம்சுதீன் என்பவா் கைப்பேசியில் தொடா்பு கொண்டு கடையின் பின்புறம் துளையிட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாராம். அதன்பேரில், விரைந்து வந்து பாா்த்தபோது கடையில் இருந்த 4 கிராம் நகை, 176 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து புத்தாராம் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அடகு கடையில் துளையிட்டு திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...