பழங்குடியினா் நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற இணைய வழியில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெற ஏதுவாக வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் மூலம் பழங்குடியினா் நல வாரிய அட்டை, நரிக்குறவா் நல வாரிய அட்டை, ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளா் அட்டை இல்லாத ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் இணைய வழியில் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாள்களில் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குறிப்பிட்ட நாள்களில் நடத்தப்பட உள்ளன.
இதில், திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) நடைபெற உள்ளது. அதேபோல், பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகம், ஆா்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகங்களில் 25-ஆம் தேதியும், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆக. 1-ஆம் தேதியும், ஆவடி வட்டாட்சியா் அலுவலகம், திருவாலாங்காடு, மீஞ்சூா் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஆக. 8-ஆம் தேதியும், கடம்பத்தூா், சோழவரம், புழல் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஆக.16-ஆம் தேதியும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. அதனால், உரிய ஆவணங்களுடன் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 4 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி இணைய வழியில் ரூ. 2.21 லட்சம் மோசடி

இணைய வழியில் இருவரிடம் ரூ.48 லட்சம் மோசடி

ஆன்லைனின் பத்திரப் பதிவு செய்வது எப்படி?
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



