சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் இணைய வழியில் பத்திரப் பதிவு செய்யப்படும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இன்று (ஜூலை 7) தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுடம் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே சார்பதிவாளர் நிலை அலுவலர்களுக்கு மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
மே 10 முதல் 259 சார்பதிவாளர்களைப் பொறுத்து மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 249 சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமல்லாமல், 10 நிர்வாக சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
இந்த பணி மாறுதல் ஆணைகள் அனைத்தும் பணியாளர்களின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டும், வெளிப்படைத் தன்மையுடனும் சார்பதிவாளர்களின் திறன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிக வருவாய் ஈட்டும் அலுவலகங்கள் மற்றும் பெருமளவில் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும் அலுவலங்களில், நிரந்தர சார்பதிவாளர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் விதமாக இம்மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இணையவழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration) கட்டாயாமாக்கல் இனி கடைப்பிடிக்கப்படும்.
இதன்மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையவழி தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான வருகை இல்லா ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.
Summary
eliminate bribery in Sub-Registrar offices, document registration carried out online starting August 17 says logesh tamilselvan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 7 - நேரலை

ஆன்லைனின் பத்திரப் பதிவு செய்வது எப்படி?
இணைய வழியில் ரூ.17.25 லட்சம் மோசடி: தெலங்கானா இளைஞா் கைது

இணையவழி பத்திரப் பதிவு முறை: இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்குவரும்: அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!





