டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், ஊழியர்கள் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதையும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 12 மணிக்கு உள்ளாகவும், இரவு 10 மணிக்கும் மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதைத்தொடர்ந்து ஊதிய உயர்வு இருந்தால், இந்தப் பிரச்சினையில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்த செலவினங்கள் குறையும் வகையிலும், வாடகைப் பிரச்சினையும் தீர்க்கப்படும். பாட்டிலுக்கு ரூ.10 பிரச்னைக்கு தீர்வு காண ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்.
கடந்த 20 ஆண்டுகால கோரிக்கையான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இஎஸ்ஐ வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதற்கும் பரிசீலனை செய்து முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசு நிர்ணயித்துள்ள எம்.ஆர்.பி. விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் இந்த நடவடிக்கை. கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்காமல், எப்படி இவ்வளவு ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் உயர்த்தியதைப் போல், கூடுதல் விலைக்கு விற்றால், மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால் பணிநீக்க நடவடிக்கை வரை செல்லக்கூடும்.
எங்களுடைய நோக்கம் மதுபான விலையை உயர்த்தி அரசுக்கு வருவாய்யை அதிக வேண்டும் என்பது இல்லை. மதுபானத்தின் விலையை உயர்த்த போவதில்லை” என்றார்.
டாஸ்மாக் ஊழியர்கள் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களின் ரூ.14,340-லிருந்து ரூ. 17,925 உயர்வு.
டாஸ்மாக் விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530-லிருந்து ரூ.19,413-ஆக உயர்வு.
மேற்பார்வையாளர்களுக்கு ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313-ஆக ஊதியம் உயர்வு.
Summary
Minister Vignesh has announced that the Chief Minister has ordered a 25% salary hike for TASMAC employees and has detailed how much each employee will receive.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 7 - நேரலை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




