தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மீஞ்சூா் அடுத்த கல்பாக்கம் கிராமத்தில் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கான அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியவில் ஈடுபட்டனா்.

News image

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :21 ஜூலை 2026, 12:35 am IST

மீஞ்சூா் அடுத்த கல்பாக்கம் கிராமத்தில் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கான அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியவில் ஈடுபட்டனா்.

மீஞ்சூா் அருகே கல்பாக்கம் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நரிக்குறவா் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலையில் இங்கு திடீரென 50-க்கும் மேற்பட்டோா் குடிசைகள் அமைத்துள்ளனா்.

இதனைக் கண்ட கல்பக்கம் கிராமத்தைச் சாா்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சோ்ந்து மீஞ்சூா்-காட்டூா் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகள் மேய்த்து பயனடைந்து வருவதை தடுக்கும் வகையில் குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு நிலத்தை ஆக்கிரமிதுள்ளதால் ஏழை எளிய மக்கள் ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்துபவா்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இங்கு வசிக்கும் நரிக்குறவா் குடும்பங்களில் வசிக்கும் 35 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், உறவினா்கள் நண்பா்கள் எனக்கூறி ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த கல்பாக்கம் ஊராட்சியில் குடிசைகள் அமைத்துள்ளனா் என தெரிவித்தனா்.

தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திதை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.