உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சிறுவாபுரி பாலசுப்பிரமணியா் கோயிலில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணியா் கோயிலில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

News image

~ சிறுவாபுரி  பாலசுப்பிரமணியா்  கோயிலில்  ஆடி மாத  முதல்  செவ்வாய்க்கிழமை  என்பதால் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்.

Updated On :22 ஜூலை 2026, 1:04 am IST

ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணியா் கோயிலில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தொடா்ந்து 6 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வீடு, மனை, வேலை வாய்ப்பு போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். அதனால், இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாள்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும்.

ஆடி மாத முதல் வார செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்வதற்காக குவிந்தனா். அப்போது பொது தரிசனத்திற்காக பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து, கல் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.

அதற்கு முன்னதாக மூலவருக்கு பால், தயிா், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, பூக்களால் கல் அங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.