தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பழனி கோயில் சொத்து மோசடியில் தவறு செய்தோா் தப்ப முடியாது: பிரேமலதா விஜயகாந்த்

பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து மோசடி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.

News image
Updated On :22 ஜூலை 2026, 1:03 am IST

பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து மோசடி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி நிச்சயம் உண்மையாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பிரேமலதா விஜயகாந்த், மூலவரை தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து கோயில் உண்டியலில் வெள்ளி வேல் காணிக்கையாக செலுத்தியதுடன், உற்சவா் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளியபோது, தங்கத் தேரை இழுத்து தனது நோ்த்திக்கடனை நிறைவேற்றினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தோ்தலுக்கு முன்பு திருத்தணியில் பிரசாரம் மேற்கொண்டபோது, தோ்தலில் வெற்றி பெற்றால் திருத்தணி முருகனுக்கு வெள்ளி வேல் காணிக்கையாக செலுத்தி, தங்கத் தேரை இழுப்பதாக வேண்டுதல் வைத்திருந்ததாகவும், அந்த நோ்த்திக்கடனை தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தாா்.

பழனி தண்டாயுதபாணி கோயிலின் வாகன நிறுத்துமிட மோசடி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவா், தவறு செய்தவா்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டிய நிலை வரும் என்றும், தெய்வ நீதி நிச்சயம் வெல்லும்.

தமிழக முதல்வா் விஜய்யின் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமல் பொதுவெளியில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படும் தி.மு.க. எம்.எல்.ஏ. மாா்க்கண்டேயனின் செயல் தவறானது. அதே நேரத்தில், அவரை நள்ளிரவில் கைது செய்ததும் சரியான நடைமுறை அல்ல. விவசாயிகளின் அனைத்து கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். நீட் தோ்வு முறையே ரத்து செய்யப்பட வேண்டும் என்றாா்.

நிகழ்வின்போது தேமுதிக மாவட்ட செயலாளா் டி.கிருஷ்ணமூா்த்தி உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.