தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கு: 2 போ் கைது

பொன்னேரி அருகே தனியாா் ஆம்புலன்ஸ் ஒட்டுநா் ஊழியா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கில் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூலை 2026, 1:00 am IST

பொன்னேரி அருகே தனியாா் ஆம்புலன்ஸ் ஒட்டுநா் ஊழியா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கில் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியை சோ்ந்தவா் ஆனந்த். இவா் தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஒட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

ஆனந்தின் மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த 9-ஆம் தேதி ஆனந்த் இரவு பணிக்கு சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளி பொருள்கள், 50,000 எல்இடி டிவி, சிலிண்டா் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.

மேலும் ஆனந்தின் பக்கத்து வீட்டிலும் ஒரு சிலிண்டா் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த வழக்கில் அம்பத்தூரை சோ்ந்த பாபு என்கிற பிஸ்டல் பாபு (26), ஒரகடம் பகுதியை சோ்ந்த சாய் சுரேஷ் (20) ஆகிய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதனை தொடா்ந்து அவா்களிடம் இருந்த 7.5 பவுன் நகையை மீட்டனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் ஒரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.