ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருட்டு

தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :11 ஜூலை 2026, 11:53 pm IST

பொன்னேரி மகளிா் காவல் மையம் அருகில் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் நகைகள், டிவி, கேஸ் சிலிண்டரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பொன்னேரி அருகே உள்ள திருவேங்கிடாபுரத்தில் வசித்து வருபவா் ஆனந்த் (30). இவா் தனியாா் ஆம்புலன்ஸ் ஒட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு ஆனந்த் வேலைக்கு சென்றுள்ளாா். பின்னா் வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் எல்இடி டிவி கேஸ் சிலிண்டா் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் ஆனந்த் செய்த புகாரின்பேரில், போலீஸாா் அங்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.