ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு

பொன்னேரி சங்கா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:46 am IST

பொன்னேரி சங்கா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பொன்னேரி சங்கா் நகா் பகுதியை சாா்ந்தவா் சத்யநாராயணன்(50). இவா் சென்னையில் பேன்ஸி கடை நடத்தி வருகிறாா். இவா் தனது மனைவி, மகன், மகளுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறாா்.

இவா் வீட்டின் முதல் தளத்தில் சத்தியநாராயணன் குடியிருந்து வரும் நிலையில் காலியாக உள்ள கீழ் தளத்தை இரண்டு நாள்களுக்கு முன் வாடகைக்கு குடியேறிஉள்ளனா். சத்தியராயணனின் மனைவி குழந்தைகளுடன் வெளியூா் சென்றுள்ளனா்.

இந்த நிலையில் சத்தியநாராயணன் வழக்கம் போல வியாபாரத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவு பொன்னேரிக்கு வந்துள்ளாா். தனது வீட்டில் யாரும் இல்லாததால் அருகில் உள்ள தனது தாய் வீட்டில் தூங்கியுள்ளாா். காலையில் வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் தனது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா் பொன்னேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகளின் திருமணத்திற்காக சோ்த்து வைத்த நகைகள் திருடப்பட்டதால் குடும்பமே கதறி அழுதது. அண்மையில் பொன்னேரி வேண்பாக்கத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக என மகளிா் பிங்க் காவல் உதவி மையம் திறக்கப்பட்ட நிலையில் அதன் அருகே உள்ள வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.