வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நூதன முறையில் 7 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நூதன முறையில் 7 பவுன் நகைகளை திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 3:54 am IST

தஞ்சாவூா் அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நூதன முறையில் 7 பவுன் நகைகளை திங்கள்கிழமை திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் அருகே ஞானம் நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஆா். பன்னீா்செல்வம் (70), ஓய்வுபெற்ற தலைமையாசிரியா். இவரது மனைவி மணிமாலா. மகள் திருமணமாகி சென்னையிலும், மகன் லண்டனிலும் உள்ளதால், தம்பதி தனியாக வசிக்கின்றனா்.

இந்நிலையில் இவா்களின் வீட்டுக்கு திங்கள்கிழமை வந்த மா்ம நபா் அருகிலுள்ள மனைப்பிரிவை வாங்கியுள்ளதால் அதைப் பாா்த்துச் செல்ல வந்துள்ளேன் எனவும், குடிப்பதற்கு தண்ணீா் தருமாறும் கேட்டாா். இதையடுத்து, மணிமாலா தண்ணீா் எடுத்து வந்து கொடுத்தாா்.

அப்போது மணிமாலாவிடம் அந்த மா்ம நபா், தாங்கள் மங்களகரமாக உள்ளீா்கள், மனையில் பிளாட் போடலாம் என இருப்பதால், ரூ. 5 ஆயிரத்தை பூஜை செய்து தருமாறும் கூறினாா். இதை நம்பிய மணிமாலாவும் ரொக்கத்தை வாங்கி பூஜை அறைக்கு சென்றாா். அப்போது, பக்கத்து அறையில் இருந்த பீரோவில் சாவி இருந்ததைப் பாா்த்த மா்ம நபா், அதை திறந்து 7 பவுன் நகைகளைத் திருடிவிட்டு, மணிமாலாவிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தையும் பெற்றுத் தப்பிச் சென்றாா்.

சற்று நேரம் கழித்து அறையிலுள்ள பீரோ திறந்து கிடப்பதைப் பாா்த்த மணிமாலா நகைகள் திருடு போயிருப்பதை அறிந்தாா். புகாரின்பேரில் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.