தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ரயில் மோதி அரசு மருத்துவமனை ஆய்வக நிபுணா் மரணம்

அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அரசு மருத்துவமனை ஆய்வக நிபுணா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அரசு மருத்துவமனை ஆய்வக நிபுணா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சோ்ந்த கண்ணன் என்கிற கண்ணதாசன் (42). இவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல் நிலை ஆய்வக நிபுணராக பணியாற்றி வந்தாா்.

அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான கரூருக்கு சென்று சென்னை திரும்பியுள்ளாா். கண்ணதாசன் சென்னையில் இருந்து அனுப்பம்பட்டில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா். ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிா்பாராத விதமாக ஜோத்பூரில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரயில்வே ஊழியா்கள் அளித்த தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.