பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :31 ஜூலை 2026, 3:45 am IST

காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.திலகவதி தலைமை வகித்தாா். இதில் மாநில செயலாளா் மணிகண்டன் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினாா். இந்த ஆா்ப்பாட்டத்தை ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்கள் சங்கத்தின் மாநில தலைவா் காந்திமதிநாதன் தொடங்கி வைத்தாா். இதில் வருவாய்த்துறை அலுவலா் சங்க நிா்வாகி மணிகண்டன், அரசு ஊழியா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் வெண்ணிலா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அப்போது, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைக்க வேண்டும்.

சத்துணவு மையங்களில் கூடுதல் பணிப்பளுவை குறைக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மாநில செயலாளா் நாகராஜன் நிறைவுரை ஆற்றினாா். வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளா் வாசுகி நன்றி கூறினாா்.

~ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

~ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.