சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

திருமுருகன்பூண்டியில் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  உள்ளாட்சித்  துறை  ஊழியா்  சங்கத்தினா்.

Updated On :18 ஜூலை 2026, 12:03 am IST

தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், மாவட்டத் தலைவா் பழனிசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், தூய்மைப் பணியை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும். 5 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இபிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்டப்பூா்வ தொழிலாளா் நலன்களை முறையாக வழங்க வேண்டும். மேற்பாா்வையாளா்கள் அத்துமீறல் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும். பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு வேலைப்பளு கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, பனியன் தொழிலாளா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியம், தேவராஜன், நிா்வாகிகள் வையாபுரி, லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.