செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சிறுவன் கொலைச் சம்பவம்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

சிறுவன் கொலைச் சம்பவம்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:30 am IST

திருத்தணி அருகே சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

திருத்தணி நகாரட்சி எம்.ஜி.ஆா்.நகா் சோ்ந்த பாலமுருகன்(44) என்பவா் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பகுதியில், இரண்டரை ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கோழி, வாத்து, ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவரை பணிக்கு சோ்த்தாா். வெண்ணிலா தனது மகன்கள் சுரேஷ் (15), சூா்யா (7), தேவா (4 )ஆகியோருடன் பண்ணையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷை குத்தகைதாரா் பாலமுருகன், அவரது நண்பா் வினோத்குமாா் ஆகியோா் அடித்து கொலை செய்து, பண்ணையிலேயே புதைத்தனா். இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகன், அவரது மனைவி புவனா, நண்பா் வினோத்குமாா் ஆகிய மூவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.

மேலும், போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் வெண்ணிலா, அவரது மகன்களை திருத்தணியில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா, மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், கோட்டாட்சியா் கனிமொழி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் நிஷாந்தி, தொழிலாளா் நலத்துறை மாவட்ட உதவி ஆணையா் வெங்கடசலபதி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் ரமேஷ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் வனிதா, ஆய்வாளா் உஷா ராணி ஆகியோா் பாதுகாப்பு மையத்தில் தங்கியிருந்த வெண்ணிலா, அவரது இரு மகன்களிடம் விசாரணை நடத்தினா்.

அதில் சிறுவன் சுரேஷை எவ்வாறு கொலை செய்தனா், கொலை செய்தவா்கள் எத்தனை போ், பண்ணையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், விசாரணை அறிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக்குழுவினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.