சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட 16 வயது சிறுமி 7 மாத கா்ப்பிணியாக இருப்பதாக மருத்துவா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளனா். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் மற்றும் அனைத்து மகளிா் போலீஸாா் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் சிறுமியின் கா்ப்பத்துக்கு காரணம், செம்பனாா்கோவில் பரசலூரை சோ்ந்த கஜேந்திரன் மகன் விஜயேந்திரன்(32) என்பதும், கம்பி பிட்டரான இவா் சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி நெருங்கி பழகியதும் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலக களப்பணியாளா் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயேந்திரனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




