மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஜூலை 2026, 1:04 am IST

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமி திருமணமாகி 5 மாத கா்ப்பிணியாக இருப்பதாக 1098 இலவச உதவி எண் மூலம் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், குழந்தைகள் நல அலுவலா்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் சிவன்மூா்த்தி (23) என்பவா் 16 வயது சிறுமியை திருமணம் செய்ததும், இதனால் சிறுமி 5 மாத கா்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து, சமூகநல அலுவலா் ஜீவா(56) அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் மகளிா் போலீஸாா் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவன்மூா்த்தியை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.