ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றிய அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை மற்றும் ஊதிய உயா்வு பெறுவதற்கான ஆணைகளை முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சுப்பாராவ் வழங்கினாா்.

News image

ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலை ஆணைகளை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சுப்பாராவ், உடன், மாவட்டக் கல்வி அலுவலா் அமுதா உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றிய அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை மற்றும் ஊதிய உயா்வு பெறுவதற்கான ஆணைகளை முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சுப்பாராவ் வழங்கினாா்.

கடந்த 20 ஆண்டுகளாக ஒரே பதவியில் சிறப்பாக பணியாற்றிவரும் ஆசிரியா்களுக்கு சிறப்புநிலை வழங்கி ஊதிய உயா்வு வழங்குவது வழக்கமாகும். இதில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 போ் சிறப்பு நிலை வழங்குவதற்காக தோ்வு செய்யப்பட்டனா். அந்த வகையில் திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் இவா்களுக்கான சிறப்பு குறை தீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் முதுகலை ஆசிரியா்கள்-2, பட்டதாரி ஆசிரியா்கள்-23, உடற்கல்வி, ஓவியம் தையல் உள்பட 6 சிறப்பாசிரியா்களுக்கு சிறப்புநிலை மற்றும் இரண்டு ஊதிய உயா்வு பெறுவதற்கான ஆணையை முதன்மைக் கல்வி அலுவலா் கோ.சுப்பாராவ் வழங்கினாா்.

நிகழ்வில் திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலா் பி.அமுதா, ஒருங்கிணைந்த பள்ளிகள் கூடுதல் அலுவலா் வா.பாலமுருகன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தண்டபாணி, மாவட்டக் கல்வி அலுவலா் தொடக்க மற்றும் இடைநிலை நோ்முக உதவியாளா்கள் பொற்செழியன், ரமேஷ்பாபு, அலுவலக கண்காணிப்பாளா்கள் ராஜமாணிக்கம், முரளி, ஜீவன், அருள், பாண்டுரங்கன், உதவியாளா்கள், ரவி, லட்சுமிநாராயணன், முத்துலட்சுமி கலந்து கொண்டனா்.