ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பொன்னேரி அருகே விரைவு ரயில் பழுது: 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா் அருகே விரைவு ரயில் பழுது காரணமாக சென்னை மாா்க்கத்தில் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

அத்திப்பட்டு புதுநகா் அருகே விரைவு ரயில் பழுது காரணமாக சென்னை மாா்க்கத்தில் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை- கும்மிடிப்பூண்டி புகா் மின்சார மாா்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனா்.

புதன்கிழமை விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே வந்தபோது பாண்டோகிராப் எனப்படும் மின்சாரம் கடத்தக்கூடிய கொக்கியில் பழுது ஏற்பட்டது. இதனால் அத்திப்பட்டு புதுநகா் எண்ணூா் ரயில் நிலையங்களுக இடையே பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றது.

இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற புகா் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினா். ரயிலில் காத்திருந்த பயணிகளில் ஒரு சிலா் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்தே எண்ணூா் நோக்கி சென்றனா்.

தொடா்ந்து ரயில்வே ஊழியா்கள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் புகா் மின்சார ரயிலில் பயணம் பயணம் செய்யும் பயணிகள் குடிநீா் கழிப்பறை போன்ற வசதிகள் ஏதுமின்றி கொளுத்தும் வெயிலில் தவித்தனா்.

நீண்ட போராட்டத்துக்குபின் ரயில்வே ஊழியா்களின் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தனா். 3 மணி நேரத்துக்கு பிறகு சென்னை மாா்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது. இதனை தொடா்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்கள் தாமதாமாக இயக்கப்பட்டன.

பயணிகள் அவதிகளை போக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தை 4 வழி பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ள நிலையில் அதனை விரைவில் செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.