மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரியில் டி-20 கிரிக்கெட் போட்டி

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
கவரப்பேட்டை  ஆா்.எம்.கே  பொறியியல்  கல்லூரியில்  தொடங்கிய கிரிக்கெட் போட்டி நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :3 மார்ச் 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள ஆா்எம்கே பொறியியல் கல்லூரியில் 15-ஆம் ஆண்டாக நடைபெறும் போட்டியை கல்விக்குழும இயக்குநா் ஜோதி நாயுடு தொடங்கி வைத்தாா். 5 நாள்கள் நடைபெறும் இத்தொடரில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சோ்ந்த 16 பொறியியல் கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.

தொடா்ந்து நடைபெற்ற இத்தொடரின் முதல் ஆட்டத்தில் புதுவாயல் ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியும், சவீதா பொறியியல் கல்லூரி அணிகளும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை 116 ரன்கள் எடுத்தது. பின்னா் களமிறங்கிய சவீதா கல்லூரி அணி 19.3 ஓவரில் 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதேபோல் நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் வெங்கடேஸ்வரா கல்லூரி அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.