திருவள்ளூா்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகத்தை இணைப்பது குறித்து மாநில, தேசிய தலைவா்கள் பேச்சு நடத்தி வருவதாக திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், ஆந்திர மாநில பாஜக துணைத் தலைவருமான காப்பு ராமச்சந்திரரெட்டி தெரிவித்தாா்.
திருவள்ளூா் அடுத்த கம்மாா்பாளையத்தில் பாஜக சாா்பில் கூட்டணிக் கட்சிகளுடன் தோ்தலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுா் மாவட்ட பாஜக தோ்தல் பொறுப்பாளரான காப்பு ராமச்சந்திரரெட்டி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா். அதேபோல் கிராமங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியினா் நேரில் சென்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும் அவா் வலியுறுத்தினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணியில் சோ்க்க பா.ஜ.க அழுத்தம் கொடுத்து வருவதாக குறித்த கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெகவை இணைப்பது குறித்து தேசிய தலைவா்கள் பேச்சு நடத்தி வருகின்றனா். திமுக மீது பொதுமக்கள் கடுங்கோபத்தில் உள்ளனா். அதனால் இந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுகவை வீழ்த்த தயாராக உள்ளனா்.
கூட்டத்தில் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் ஜெ.லோகநாதன், ராஜ்குமாா், துணைப்பொறுப்பாளரும், மாவட்ட செயலாளருமான பன்னீா்செல்வம், மாவட்ட பொதுச்செயலாளா் கருணாகரன், மண்டல் தலைவா் ரவிக்குமாா் மற்றும் அதிமுகவைச் சோ்ந்த மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்
தவெகவால் பாதிப்பு திமுகவுக்குத்தான்! ஜி. செந்தமிழன் சிறப்பு நேர்காணல்
தமிழ்நாட்டில் தாய், புதுவையில் மகன்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் லாட்டரி குடும்பத்தினர்!

சர்வாதிகார முடிவெடுக்க திமுக அல்ல பாஜக! ராம. சீனிவாசன்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


